ரூ. 50, 100 கொடுத்துவிட்டு 3 மணிநேர மசாலாவை எதிர்பார்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம் இது...உலக சினிமாவை பார்த்து விட்டு நம்ம ஊர்லயும் இப்படி ஒரு படம் வருமா என்று ஏங்குபவர்கள் கொண்டாடவேண்டிய படம் இது .பெரும போராட்டத்துக்கு பிறகு பெங்களூர்இல் பார்த்துவிட்டு எழுதும் விமர்சனம் இது ....
மெதுவாக ஆரம்பித்து எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கும் கதை.. இந்திய சினிமாக்களின் சாபக்கேடான மாஸ் ஹீரோ introduction இல்லாமல் ரொம்ப சாதாரணமாக அறிமுகம் ஆகும் பொழுதே தெரிந்து விடுகிறது இது 20 வருடம் கழித்து வரவேண்டிய படம் என்று.. முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போர் அடித்தாலும் அதன் பிறகு ஆப்கானிஸ்தான், தீவிரவாதி என திரைகதை சர சர என வேகம் எடுக்கிறது.
அமெரிக்காவில் Ph.D படிக்கும் நிருபமா, குடியுரிமைக்காக நடன ஆசிரியர் கமலை திருமணம் செய்து கொள்கிறார். அதிக வயது வித்தியாசம் காரணமாக கமல் மேல் ஆசை இல்லாமல், தனது "Boss" மேல் கள்ள காதல் கொள்ளுகிறார் நிருபமா.. கமலை விவாகரத்து செய்ய காரணம் வேண்டி ஒரு உளவாளி வைக்கிறார்.. கமலை பின்தொடரும் உளவாளி திடீரென கொல்லபடுகிறார்.. அதன் பின் கமல் நடன ஆசிரியர் அல்ல, அவர் ஒரு முஸ்லிம், அல்-கொய்தா பயிற்சி பெற்ற தீவிரவாதி என தெரிகிறது.கதை ஆப்கானிஸ்தானில் விரிகிறது.
இந்திய உளவு அமைப்பான "ரா" பிரிவால் அனுப்பப்பட்ட அதிகாரி கமல், தீவிரவாதிகளுடன் இருந்து அவர்களது திட்டங்களை உளவு சொல்லுகிறார்..
கமல் யார் என அவர்களுக்கு தெரிந்த பின்பு அங்கிருந்து தப்பி அமெரிக்காவில் தலைமறைவு வாழ்கை வாழ்கிறார்.. இறுதியில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலில் இருந்து "நியூ யார்க்" நகரத்தை காப்பாற்றுகிறார்.. இது தான் சுருக்கமான கதை...
கமல் நினைத்து இருந்தால் இந்த படத்தை பெரிய மாஸ் ஹீரோ Build -up உடன் எடுத்திருக்கலாம்.. ஆனால் எதார்த்தத்துடன், லாஜிக் mistake இல்லாமல் எடுத்திருக்கிறார்.. குறிப்பாக அந்த ஆப்கானிஸ்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹாலிவுட்கே சவால் விடும்படி அமைந்திருக்கிறது.OSCAR விருதை வென்ற "தி ஹர்ட் லாக்கர்" படம் கூட இவ்வளவு நுணுக்கமாக தீவிரவாதம் பற்றி ஆராயவில்லை. கமல் உழைப்பையும், பணத்தையும் கொட்டி இருக்கிறார்.
NATO படை உடன் தீவிரவாதிகள் மோதும் காட்சி தத்ரூபம், குண்டுகள் திரை இல் வெடித்து சிதறுவது, நம்மை பதைபதைக்க வைக்கிறது. இரு வேறு கதை பாத்திரங்களில் கமல் வாழ்ந்து இருக்கிறார். அண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜா குமார் சிறப்பாக நடித்துள்ளனர். "Auro 3D " மிக தெளிவான ஒலிபதிவு, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா என இரண்டு இடங்களிலும் அசத்தும் கேமரா, தத்ரூபமான "Art - Direction", எடிட்டிங் என தரமான தொழில்நுட்பம் உள்ள கூட்டணி அமைந்து இருக்கிறது.

படத்தின் முக்கிய குறை பின்னணி இசை, சில விறுவிறுப்பான காட்சிகளில் வெறும் மௌனமே பின்னணி இசையாக இருப்பதால், அந்த காட்சியில் உள்ள த்ரில் குறைந்து போகிறது. இந்த பகுதியில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்..படத்தின் ஒரு 10 நொடி காட்சியில், மரண தண்டனைக்கு முன்னால் "குரான்" ஓதுவது போல வருகிறது.. இது ஒருவேளை முஸ்லிம்களை காயபடுத்தலாம். இந்த காட்சி கொஞ்சம் மனதை நெருடுகிறது. இதை தவிர்த்து வேறு எந்த ஒரு காட்சியும் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. இந்த படம் வேறு எந்த நாட்டில் வந்து இருந்தாலும் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருக்கும். உலக திரைபட விழாக்களில் விருதுகளும், பாராட்டுகளும் நிச்சயம்...
படம் பார்த்தவுடன் எனக்குள் ஒரு வினா?.. அப்படி சட்டம் ஒழுங்கு கேட்டு போக என்ன இருக்கிறது இந்த படத்தில் என்று.. இந்த படத்தை தடை செய்து விட்டால், தமிழ்நாடு அமைதி பூங்கா ஆகிவிடுமா?, தீவிரவாதிகள் ஆயுத்தை கீழே போட்டுவிட்டு சரண் அடைவார்களா? எல்லை தாண்டிய பயங்கரவாதம் நின்றுவிடுமா ??? "ஒட்டு பொறுக்கி" அரசியல்வாதிக்கு இது புரிந்தால் சரி... இது உலக சினிமா..உள்ளூர் ஊர் குருவிகளுக்கு புரியாது... கமல் தமிழனாய் பிறந்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை போலும்....
கமலின் இந்த விஸ்வரூபம், சிலரின் நிஜ சுயரூபத்தை கிழித்து காட்டுகிறது...
தமிழ்நாட்டு மக்கள் பிப்.6 வரை காத்திருக்க வேண்டும் போல...
உலக சினிமா கொடுத்த உலக நாயகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..... மொத்தத்தில் இந்த படம் கமலுக்கு மணிமகுடம், தமிழ் சினிமாவுக்கு வைர கிரீடம்...
Rating : 4.4 / 5
பின்குறிப்பு: எதிர்பார்க்கும் விகடன் மார்க்
48 / 100